மன்னார் முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 29ம் திகதி இரவு யானை தாக்கியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சசிகுமார் கௌசல்யா (38-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் காட்டுப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.