மன்னார் மாவட்டத்தில் இன்று அதிகாலை கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதன் காரணமாக 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகளில் உள்ள 112 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.