சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் இன்றுகாலை 7.45அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பனாமா அரசுக்கு சொந்தமான“MT NEW DIAMOND“ என்ற கப்பலே தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலின் எஞ்ஜின் அறையில் தீ ஏற்பட்டுள்ளது. கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாக கூறப்பட்டது. தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து கடற்படை பணிக்குழாம் உறுப்பினர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த கப்பல் இருந்து இதுவரை 19 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. இன்றுமாலை கப்பலில் இருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குவைட்டில் இருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் ஏற்றி வந்த கப்பலே விபத்துக்குள்ளாகியது. தீப்பரவலையும், எண்ணெய் கசிவையும் கட்டுப்படுத்துதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.