வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.00மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளார். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார்.

பின் 8.00 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 26 வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.