கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இதற்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் 011 278 7303, 011 278 7385 , 011 278 7393 011 278 7399 அல்லது 011 278 7444 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து நிவர்த்தி செய்துகொள்ள முடியும். நாடளாவிய ரீதியில் காணப்படும் 19 கல்வியியல் கல்லூரிகளில் 50 கற்கை நெறிகளுக்காக இம்முறை 4,253 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.