வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு காலி முகத்திடலில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் நான்கு மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியம் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.