கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌனஅஞ்சலி, இறைவணக்கம், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இடம்பெற்றது.