கிளிநொச்சி சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லையெனவும், ஒரு காலையிழந்த அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியிலிருந்து பூநகரிப் பக்கம் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிப்பருமே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.