கிழக்கு கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளனர்.
குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.
கடந்த வாரம் எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் மசகு எண்ணெயுடன் பயணித்தபோது கிழக்கு கடற்பரப்பில் வைத்து தீப்பற்றியிருந்தது.