வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபாநகர் பகுதியில், நேற்றுக் காலை 9.30 மணியளவில் புதையல் தோண்டமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைதுசெயய்யப்பட்டதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, வவுனியா உட்பட பல பகுதிகளை சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து மண்வெட்டி உள்ளிட்ட சில பொருள்களையும் இரண்டு சொகுசுகார்களையும் கைப்பற்றியுள்ளதாககவும் தெரிவித்துள்ளனர்.