மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவுக்கே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர், சபை அமர்வுகளில் கலந்துகொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.