யாழ்ப்பாணம் – கோப்பாய், பூதர்மடம் பகுதியில் நேற்று மதியம் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார்.

சம்பவத்தில் கச்சேரி நல்லூர்வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.