யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியான குமாரசுவாமி கிருஷாந்தி மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் உள்ளிட்டோரின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் செம்மணியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.