வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று மதியம் பயணித்த சொகுசு பேரூந்து சாலியவௌ பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் பாதை ஊடாக கொழும்பு சென்றுகொண்டிருந்த சமயம் மாலை 4.30 மணியளவில் சாலியவௌ பாடசாலையருகே பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.