ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படுவார் என கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார கூறியுள்ளார். தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதித் தலைவர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்படும் நபர், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதித் தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 03 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.