வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் தற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் நேற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.