மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்ய இடமளித்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்தவகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.