மட்டக்களப்பு வெல்லாவெளி மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் தனியார் வளவில் உள்ள கிணற்றிலிருந்து 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனியார் தமது வளவில் உள்ள கிணற்றில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மோட்டார் குண்டினை கண்டெடுத்துள்ளார்.

சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் பார்வையிட்ட பின் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினர் விரைந்து குண்டினை செயலழிக்கச் செய்துள்ளனர்.