கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக, தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாளிகாவத்தை, கொலன்னாவை, வெல்லம்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகள் இவ்வாறு நீரிழ் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்ததனால் இவ்வாறு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, கண்டி மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 10 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 135 குடும்பங்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.