தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மறைந்த இராணுவத்தளபதி தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 21ஆவது நினைவுதினத்தையிட்டு வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களால் இன்று (09.09.2020) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது.