மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் சந்துருக்கொண்டான் சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபி அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி இராணுவம் மற்றும் ஊர்காவல்படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 10 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 42பேர், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.