சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 21,721 வரை அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 874ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மரணங்கள் இந்தியாவில் பதிவானதோடு, அங்கு 1,107 பேர் குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 89,852 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.