எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுக்கான மாற்றீடுகளை அறிமுகப்படுத்தியதன் பின்னர் தடை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையினால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.