பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம்  இன்றும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (10) காலை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இன்று (11) காலை சுமார் 10 கைதிகள் உணவினை உட்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 45 கைதிகளில் 40 பேர் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.