ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை முன்னறிவிப்பின்றி நீக்க இலங்கை மருத்துவ சபை எடுத்த தீர்மானம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

Patrice Lumumba University எனப்படும் The People’s Friendship University of Russia பல்கலைக்கழகம், Pirogov Russian National Research University மற்றும் Tver State Medical University ஆகியன அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்படன.

கடந்த ஆண்டுகளில் அடிக்கடி இலங்கைக்கு வந்த குறித்த ரஷ்ய பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் இலங்கை மருத்துவ சபையுடன் சந்திப்புகளை நடத்தியதாகவும் இலங்கை மருத்துவ சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை தவறாது செலுத்தியதாகவும் கொழும்பில் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.