தபால் திணைக்களத்தின் வெவ்வேறு பிரிவுகளில் 1633 வெற்றிடங்கள் காணப்படுவதாக தபால் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவும் ஊழியர் பற்றாக்குறை தபால் திணைக்களத்தின் நடவடிக்கைகளின் செயற்திறன் மற்றும் தரத்தில் பாதகமான தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.