மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 405 பேர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைளத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய டுபாயிலிருந்து 341 பேரும் கட்டாரிலிருந்து 64 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவர்களுக்கு ஆரம்பகட்ட பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த 405 பேரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.