அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், உதய பிரபாத் கம்மன்பில, மொஹமட் அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இக்குழுவின் அறிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.