யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் (13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார்.வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.