நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர்.இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,005 ஆக உயர்ந்துள்ளது.

இரணவில வைத்தியசாலையில் 06 பேரும் ஐடிஎச்-இல் 06 பேரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.

எனினும், இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 39 புதிய தொற்றாளர் இனங்காணப்பட்டனர்.

அதனையடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3234 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் வெளிநாட்டவர்கள் 08 உள்ளிட்ட 217 பேர் சிசிச்சைப்பெற்று வருகின்றனர்.