இலங்கையில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதில் ஒருவர் இன்று உயிரிழந்த கொரோனா தொற்றாருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 6 பேர், குவைத்தில் இருந்து வருகை தந்த ஒருவர், கட்டாரில் இருந்து வந்த ஒருவர், வியட்னாமில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் பஹ்ரைனில் இருந்து வந்த 4 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய நாட்டு கடற்படையை சேர்ந்த 5 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,247 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 229 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.