கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 28 பேர் நேற்று (14) இனங்காணப்பட்ட நிலையில், தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் 3262ஆக உயர்வடைந்துள்ளது.அவர்களில் 3005 பேர் குணமடைந்துள்ளதுடன், 244 பேர் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நேற்று தொற்றுக்கு உள்ளானவர்கள் விவரம்

பங்களாதேஷில் இருந்து வந்த நால்வர், குவைத்தில் இருந்து வந்த ஒருவர்,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 11 பேர், கட்டாரில் இருந்து வந்த ஒருவர், வியட்நாமில் இருந்து வந்த ஒருவர்,   இந்தியாவில் இருந்து வந்த 05 பேர்,  பஹ்ரைனில் இருந்த வந்த 04 அத்துடன், பஹ்ரைனில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவர்.