முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது, நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருள்கள் சில இன்று இனங்காணப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் காணியின் உரிமையாளர் நிலத்தைத் தோண்டும்போது இதை அடையாளம் காணப்பட்டுள்ளன.

நிலத்தின் மேற்பகுதியில் முதல் கட்டமாக வெடிபொருட்கள் சில காணப்படுவதனால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நாளை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பகுதியை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.