அரச கதிரியக்கவியலாளர்கள் இன்று (16) ஒருநாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.தமது நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கத்தின் தலைமை செயலாளர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை தொடர்புகொள்ள நாம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.