வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்கோவிலுக்குச் செல்வதோ, பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்களெனவும், நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவில் வருடாந்த உற்சவம், நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, இதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது