Header image alt text

சொந்தமான வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காக 6.25 வீதம் வட்டி விகிதத்தில் கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளை அமைத்துக்கொடுக்க தேவையான இடங்களை இலவசமாக வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். Read more

யாழ் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ´பகிடிவதை´ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய இம்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது-43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 203 பேர் நாட்டின் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளிநாடுகளில் தங்கியிருந்த 111 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். டுபாயில் இருந்து 22 பேரும், கட்டாரில் இருந்து 52 பேரும், ஜப்பானில் இருந்து 30 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 07 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.