சொந்தமான வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காக 6.25 வீதம் வட்டி விகிதத்தில் கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளை அமைத்துக்கொடுக்க தேவையான இடங்களை இலவசமாக வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அதேபோல், வடக்கு மாகாணத்தில் 22 முகாம்களில் தங்கியிருக்கும் 409 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தனி வீடுகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.