நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சீன தூதரகத்தின் முதலாவது செயலாளரான சுயn ஓழைபெ ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்காக சீன அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பிலும், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பின் அபிவிருத்திக்காக சீன அரசினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக சீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீதிமன்றக் கட்டடங்களின் இடப்பற்றாக்குறை மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளதென நீதியமைச்சு அறிக்கையிட்டுள்ளது.