மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலோர பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 தொடக்கம் 70 வரையில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.