கண்டி – பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை தாழிறிங்கிய அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கிய நிலையில், அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது விழ்ந்து அனர்த்ததிற்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தில் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் இதுவரை 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் 2 பேரை காணவில்லை என்பதுடன் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.