யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரத்தில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் வைத்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யுகேந்திரன் அஜந்தன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.