வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை சேர்ந்த 27வயதுடைய இளைஞரொருவர் வட்ஸ்அப் ஊடாக பணம் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் பாசிக்குடா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக ஒரு குழுமத்தை அமைத்து ஏதோவொரு வகையில் பிறரின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை உள்வாங்கி நம்பிக்கையை ஏற்படுத்தி பண பரிமாற்றம் செய்து அதன் ஊடாக பணத்தினை கொள்ளையடித்து ஏமாற்றும் செயலை குறித்த இளைஞர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இராணுவ புலானய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை தந்திரமான முறையில் பாசிக்குடா பிரதேசத்திற்கு வரவழைத்து கல்குடா பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.