கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியா, டுபாய், சென்னை மற்றும் ஜப்பானில் இருந்து குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இருந்து 288 பேரும், டுபாயில் இருந்து 420 பேரும், சென்னையில் 6 பேரும் மற்றும் ஜப்பானில் இருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.