9வது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் (COPE) குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோப் குழுவிற்கான தலைவர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத்தை முன்மொழிந்ததுடன், ஜயந்தி சமரவீர வழிமொழிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.