ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏஎல்எம் அதாவுல்லா இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் உடையை ஒத்த ஓர் ஆடையை அணிந்தவாறு நாடாளுமன்றிற்குள் பிரவேசித்துள்ளார். இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததோடு நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். குறித்த உடையினை அணிந்து நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அவரை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றுமாறும் கோரினர். இதன் பின்னர் சபையிலிருந்து வெளியேறிய அதாவுல்லா தாம் குறித்த ஆடை அணிந்தமைக்கான காரணத்தினையும் தெரிவித்ததோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது போன்ற உடையை அணிந்திருந்தார் எனவும் நினைவுகூர்ந்தார். அத்துடன் குளிர் காரணமாகவே தாம் அவ்வாறு ஆடை அணிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.