இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுடன் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் விசேட காணொளி கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.