இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MT New Diamond கப்பலின் கிரேக்க நாட்டு கெப்டன் ´தீரோஸ் ஹீலியாஸ்´ இற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுத்திருந்த அழைப்பானையின் அடிப்படையில் குறித்த கெப்டன் இன்று இன்று காலை 9.30 க்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் குறித்த கெப்டனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அவரை மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுத்திருந்தது.

தீயைக் கட்டுப்படுத்த தானியங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் தீ பரவல் குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த கெப்டனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.