20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைய உள்ளதுடன் மனுக்களை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகியவர்கள் இவ்வாறு குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.