கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 339 பேர், இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தில், அவுஸ்திரேலியாவில் இருந்து, 287 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

டுபாயிலிருந்து 47 பேரும் இந்தியாவில் இருந்து 5 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.