மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை சின்னவெம்பு கடலில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிந்துள்ளார். பாலையடித்தோன சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை வயது (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் கரைவலைத் தொழிலுக்குச் சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்ட கயிறு அறுந்து கடலில் சென்றுள்ளது. அதனை மீண்டும் உழவு இயந்திரத்தில் இணைக்கும் முகமாக கடலில் எடுக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.